சபரிமலைஐயப்பன் கோவில் புனிததல யாத்திரை இலங்கை அரசு அங்கீகாரம்.

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை வழிபாட்டுத் தலத்தைப் பிரகடனப்படுத்தி வசதிகளை வழங்குவதற்காக இலங்கை அரசின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் இலங்கையின் ஐயப்ப பக்தர்கள் 15,000 பேர் சபரிமலை வந்து சாமியை தரிசிக்கின்றனர்.
இந்தப் பிரகடனத்திற்கு புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Tags : சபரிமலைஐயப்பன் கோவில் புனிததல யாத்திரை இலங்கை அரசு அங்கீகாரம்.