ரயில்வே துறைக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வாய்ப்பு

by Editor / 16-06-2022 09:55:12pm
 ரயில்வே துறைக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வாய்ப்பு

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கு திறனை கண்காணிப்பது, புறநகர் ரயில் போக்குவரத்தில் விபத்தில்லாமல் அதிக ரயில்களை இயக்குவது, துல்லியமாக ரயில் பாதையை ஆய்வு செய்வதற்கு தொழில்நுட்பம், அதிக எடையைத் தாங்கும் சரக்கு ரயில் பெட்டிகளுக்கு நெகிழ்வு அடுக்கு, ரயில் மின் பாதைகளை கண்காணிப்பது, எடை குறைவான ரயில் சரக்கு பெட்டிகள் தயாரிப்பது, ரயில் பாதை சரளைக் கற்களை சுத்தப்படுத்தும் இயந்திரம், ஊழியர்களுக்கான முன் பயிற்சி மற்றும் தன்னிலை அலுவல் கால பயிற்சி, ரயில் பாலங்களை ஆய்வு செய்ய தற்கால புதிய தொழில்நுட்பம், பயணிகள் சேவையை மேம்படுத்த மின்னணு தரவுகளை பகுப்பாயும் தொழில்நுட்பம் போன்ற ரயில்வே துறைக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வாய்ப்பு தரப்பட இருக்கிறது. இதுபோன்ற 100 தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இதற்கான விரிவான தகவல்களை www.innovation.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசும்போது மதுரை – தேனி பகுதியில் போடிநாயக்கனூர் வரை ரயில் பாதை பணிகள் முடிவடைந்த பிறகு புதிய ரயில்கள் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

 பல்வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். பயணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காகஇரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரயில் இடைநிறுத்தங்கள் வழங்குவது கூடாது என்பது ஒரு கொள்கை முடிவாக உள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் நடை மேடைகளை உயர்த்துவது, நீட்டிப்பது மேற்கூரை அமைப்பது, மின்சார சேமிப்பிற்கான எல்இடி விளக்குகள் அமைப்பது போன்ற பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் அளவுக்கு அதிகமான ரயில்கள் கையாளப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கு போதிய இடவசதியும் இல்லை. இதனால் மதுரை – கோயம்புத்தூர் பிரிவில் கூடுதல் ரயில்கள் இயக்குவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. கடந்த மே மாதம் 25 அன்று ரூபாய் 358.63 கோடி மதிப்பில் நடைபெறப் போகும் மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு வேலைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன. 

ஒப்பந்ததாரர்களுடன் நாளை (ஜூன் 17) சென்னையில் நேர்காணல் நடைபெற இருக்கிறது. வருகிற ஜூலை 25 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அதன்பின்பு மறு சீரமைப்பு பணிகள் துவங்கும் என்றார். மதுரை – தேனி புதிய ரயில் பாதை பொதுமக்கள் உபயோகத்திற்கு தடை செய்யப்பட்டது மற்றும் ஆபத்தானது என அறியாமல் ரயில் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கும் சூழல் உள்ளது. இந்த பகுதியில் சில இடங்களில் ரயில் சுரங்கப்பாதை அமைப்பது, பராமரிப்பது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார். 
 

 

Tags : Opportunity for new start-up companies to develop technology and processors required for the railway sector

Share via