இளைஞரின் தலையை துண்டித்துக் கொலை செய்த விவகாரம் - குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ்.

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில் முன் விரோதம் காரணமாக கடந்த மாதம் குத்தாலிங்கம் என்கிற இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகளான காசிமேஜபுரம் வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் செண்பகம்(43), கணேசன் என்பவரின் மகன் ராமசுப்பிரமணியன்@ ரமேஷ் (25), மணிகண்டன் என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (24) மற்றும் குற்றாலம் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் மணிகண்டன் @ புறா மணி (32) ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் இவர்கள் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரை செய்தார் அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் 4 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் ஒன்றாம் தேதி நான்கு நபர்கள் கொண்ட தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் அதற்கான உத்தரவு பாளையங்கோட்டை சிறையில் தென்காசி போலீஸாரால் வழங்கப்பட்டது.
Tags : இளைஞரின் தலையை துண்டித்துக் கொலை செய்த விவகாரம் - குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ்.