நண்பரை காட்டுக்குள் கொன்று புதைத்த இளைஞர்

கோத்தகிரி பகுதியை சேர்ந்த 45 வயதான சிவகுமார் என்பவர் காட்டுப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலி தொழிலாளியான இவருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. சம்பவ தினத்தன்று சிவகுமார் தனது நண்பன் விஷ்ணுவுடன் மது கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். தலைக்கேறிய போதையில் சிவக்குமார் விஷ்ணுவின் தாயை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் விஷ்ணு அவரை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.
Tags :