பூனை என நினைத்து சிறுத்தையை வளர்த்த பெண்

ரஷ்யாவில் பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை விக்டோரியா என்ற இளம்பெண் வளர்த்துள்ளார். ஒருகட்டத்தில் அது பூனை அல்ல கருஞ்சிறுத்தை என தெரிந்தபோதும், தனது செல்லப்பிராணியாகவே அதனை அவர் ஏற்றுக்கொண்டு, அதற்கு லுனா என பெயரிட்டு வளர்த்து வருகிறார். கருஞ்சிறுத்தை மட்டுமல்லாமல் நாய் ஒன்றையும் அவர் வளர்த்து வந்துள்ளார். இந்த இரண்டு செல்லப்பிராணிகளும் ஒன்றாகவே விளையாடுகின்றன. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் விக்டோரியா பதிவிட்டுள்ளார். இணையத்தில் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
Tags :