மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த  பட்ஜெட்டில் கூடுதல் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

by Editor / 01-06-2021 07:35:18pm
மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த  பட்ஜெட்டில் கூடுதல் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 


தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மதுரையில் விஞ்ஞான ரீதியாக திட்டமிட்ட தடுப்பு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக கூறிய அவர், மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா பரவலை விரைந்து கட்டுப்படுத்த முடியும் என்றார். அனைத்து மாநிலங்களையும் பாகுபாடின்றி மத்திய அரசு பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதில் அரசியல் செய்ய கூடாது .
மத்திய அரசின் மேலாண்மை குறைவு காரணமாக, தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிரந்தரமாக மருந்து தயாரிப்பு ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.. தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பட்ஜெட்டில் கூடுதல் நிதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:

 

Tags :

Share via