சேலம் மத்திய சிறையில் உள்ள காவலர்களுக்கு சட்டையில் கேமரா

by Staff / 19-12-2022 02:39:56pm
சேலம் மத்திய சிறையில் உள்ள காவலர்களுக்கு சட்டையில் கேமரா

கைதிகளை கண்காணிப்பதற்காக சேலம் மத்திய சிறையில் உள்ள காவலர்களுக்கு சட்டையில் கேமரா பொருத்தப்பட்டன.ஏற்கெனவே புழல் சிறையில் காவலர்களுக்கு சட்டையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இது சேலம் மத்திய சிறைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை சிறைத்துறை துணை தலைவர் சண்முகசுந்தரம் பங்கேற்று சிறை காவலர்களுக்கு கேமரா வழங்கினார். சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் பணியை துவக்கி வைத்தார்.இந்த கேமராக்கள் மூலம் சிறையின் அனைத்து பகுதிகளையும் எளிதில் கண்காணிக்க இயலும் என்று அவர்களே தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories