இலங்கை புதிய அதிபர் யார்..? வாக்குப்பதிவு தொடங்கியது.

by Editor / 21-09-2024 09:04:28am
இலங்கை புதிய அதிபர் யார்..? வாக்குப்பதிவு தொடங்கியது.

இலங்கை அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க உட்பட38 பேர் களத்தில் உள்ளனர். தேர்தல்முடிவு நாளை வெளியாகிறது.

இலங்கையில் கடந்த 2019-ல்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மகிந்த ராஜபக்சவின் குடும்பஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தார். 2022 ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச, தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்கஇடையே கடும் போட்டி நிலவுகிறது.

இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், இரவு 7 மணி முதல்வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.இலங்கையின் புதிய அதிபர் யார்என்று நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61,000 போலீஸார், 9,000 சிவில் பாது­காப்பு படை­யினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : இலங்கை புதிய அதிபர் யார்..? வாக்குப்பதிவு தொடங்கியது.

Share via