முக்கிய நிகழ்வுகள் :
முக்கிய நிகழ்வுகள் :-
1903ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
முக்கிய தினம் :-
உலக வானிலை தினம்
உலக வானிலை தினம் மார்ச் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. அடுத்துவரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது நம்முடைய கடமையாகும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Tags :