இளைஞர்களின் பொறுப்பு என்பது வரும் தலைமுறைக்கு மிகவும் முக்கியமானது-ஆளுநர் ஆர்.என்.ரவி.

by Editor / 07-11-2022 07:44:56am
இளைஞர்களின் பொறுப்பு என்பது வரும் தலைமுறைக்கு மிகவும் முக்கியமானது-ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 2022 ம் ஆண்டு மாதிரி விசாரணை நீதிமன்ற போட்டிக்கான நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த 20 வருடங்களில் எல்லாமே மாறிவிட்டது. நம் மீதான விருப்பம், சமுதாயத்தின் மீதான விருப்பம், குடும்பத்தின் மீதான விரும்பம் என எல்லாம் மாறிவிட்டது. இளைஞர்களின் பொறுப்பு என்பது வரும் தலைமுறைக்கு மிகவும் முக்கியமானது. சட்ட திட்டங்களும் கூட மாற்றத்திற்கான வழிவகுக்கிறது.

நாம் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் எவ்வளவோ முன்னேறி உள்ளோம். முன்னேற்றத்திற்கான வழியை எப்போதுமே தேடிக்கொண்டே இருக்கிறோம். கவனத்திற்குரிய தொழில் முறை என்றால் அது மருத்துவ துறையை தான் சொல்வோம். அதே சமயம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்த துறையை ஆட்டி படைக்கிறது. துல்லியமான செயல்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செய்து முடிக்கபடுகிறது. ஆனாலும் மருத்துவர்கள் அதற்கு ஈடான வகையில் உழைத்து கொண்டு இருக்கிறார்கள்.

இன்று ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, 20 வயதினருக்கும், 30 வயதினருக்கும் உண்டான இடைவெளியே வேறுபட்டுள்ளது. 20 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கு இடைவெளிக்கு காரணமே தொழில்நுட்ப முன்னேற்றம் தான். அவர்களுக்கு இடையேயான தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பதை அரசியலமைப்பு சட்டம் தான் தீர்மானிக்கிறது. அரசியல் அமைப்பின் மூலம் தான் இந்தியா ஆள பட வேண்டும்.

இந்தியாவில் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல நீதி துறை மாற்றம் அடைய வேண்டும். புதிய தொழில் நுட்பங்கள் குறிப்பாக செயலிகள் போன்ற அம்சங்களை மெட்ராஸ் பார் கவுன்சில் பயன்படுத்தி, நீதியை அணுகுவதை எளிமையாக்க வேண்டும். இந்திய வரலாற்றில் முக்கியமான பங்கை மெட்ராஸ் பார் கவுன்சில் வகித்து உள்ளது.

நம் நாட்டு இளைஞர்களாகிய உங்களின் பங்களிப்பு  என்பது நீங்கள் எங்கிருந்தாலும் நம் நாட்டிற்கு தேவை படுகிறீர்கள். நாம் எங்கெங்கோ ஒரு
மூலையில் இருக்கிறோம், ஆனால் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்றார்.

 

Tags :

Share via