2025 -ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு...

by Admin / 07-10-2025 02:19:59am
 2025 -ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு  மூன்று பேருக்கு...

புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான அடிப்படை கண்டுபிடிப்புகளுக்காக மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது...

மேரி இ. பிரன்கோவ் , 1961 இல் பிறந்தார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.. அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் சிஸ்டம்ஸ் பயாலஜியில்

பிரெட் ராம்ஸ்டெல் , 1960 இல் பிறந்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1987 இல் முனைவர் பட்டம் பெற்றார். அறிவியல் ஆலோசகர், சோனோமா பயோதெரபியூடிக்ஸ், சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா.

ஷிமோன் சகாகுச்சி , 1951 இல் பிறந்தார். ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் 1976 இல் எம்.டி. மற்றும் 1983 இல் முனைவர் பட்டம் பெற்றார். ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு எல்லை ஆராய்ச்சி மையத்தில் புகழ்பெற்ற பேராசிரியர்.

பரிசுத் தொகை : 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர், [ இந்திய பண மதிப்பில் பத்துகோடியே நாற்பது லட்சத்து ஐம்பத்து ஒராயிரத்துஎண்ணூத்தி தொன்னூற்று மூன்று ரூபாய்-10,40,51,893.00  ]  பரிசு பெற்றவர்களுக்கு சமமாகப் பகிரப்படும்.

கரோலின் இஸ்கா இன்ஸ்டியூட்டில் உள்ள நோபல் சபை 2025 ஆம் ஆண்டு உளவியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கின்றது.

புற நோய் எதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக... உடலின் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு அமைப்பு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அது நமது சொந்த உறுப்புகளை தாக்க கூடும்உடலுக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கும் புற நோய் எதிர்ப்பு சகிப்புத்த தொடர்பான புரட்சிகர கண்டுபிடிப்புக்காக 2025 ஆம் ஆண்டு உளவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார்கள்.

 

 2025 -ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு  மூன்று பேருக்கு...
 

Tags :

Share via