திமுக நிர்வாகியை தூக்கி வீசிய போலீசார்

by Staff / 19-04-2024 02:55:21pm
திமுக நிர்வாகியை தூக்கி வீசிய போலீசார்

கோயம்புத்தூர் பி.என் புதூரில் பூத் ஸ்லீப் வழங்கும் இடத்தில் காவல்துறையினர் அதிக கூட்டம் கூட்டக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். அதையும் மீறி திமுகவினர் கூட்டமாக நின்று கொண்டிருந்ததால் அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இருப்பினும் கலைந்து செல்லாமல் திமுக நிர்வாகி பாக்யராஜ் என்பவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டார். அவரை குண்டுக் கட்டாக தூக்கி போலீசார் வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories