ஈச்சர் லாரி மற்றும் பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி..

by Editor / 30-11-2023 09:25:03am
ஈச்சர் லாரி மற்றும் பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி..

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒட்டுனர்  பேச்சிமுத்து பாண்டியன்  என்பவர் நிலவரப்பட்டியில் இருந்து  ஈச்சர் லாரியில் பெப்சி காலி பாட்டல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தபோது வாழப்பாடி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் வந்த விழுப்புரம் பகுதியில் சேர்ந்த பிரவீன் குமார் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சுதர்சனம் குடியாத்தம் பகுதியில் சேர்ந்த பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி  உயிரிழந்தனர் மேலும் ஈச்சர் லாரி ஓட்டி வந்த ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,இதனையடுத்து தகவலறிந்து வந்த   வாழப்பாடி போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்  மூன்று பேரின்  உடலை மீட்டு உடற்க ௯று ஆய்வுக்காக  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

 மேலும் இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இதனால் வாழப்பாடி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது ,
 

 

Tags : ஈச்சர் லாரி மற்றும் பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி..

Share via

More stories