அரிய வகை நோயால் ஹாலிவுட் நடிகர் மரணம்

‘கேப்டன் மார்வல்' படத்தில் காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்த கென்னெத் மிட்ச்செல் Amyotrophic Lateral Sclerosis என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 49. 5 வருடங்களுக்கும் மேலாக இந்த நோயுடன் போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலாமானார். இவரின் இறப்பிற்கு ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கனடாவின் டொராண்டோ நகரத்தில் பிறந்த கென்னத் மிட்செல், ‘கேப்டன் மார்வெல்ஸ்’ மற்றும் அபோகாலிப்டிக் டிவி தொடரான ’ஜெரிகோ’ ஆகியவற்றில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
Tags :