600கோடி பி.ஜே.பி சகோதர்கள் மெகா மோசடி.. கும்பகோணத்தில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்

by Editor / 22-07-2021 08:35:36am
600கோடி பி.ஜே.பி சகோதர்கள் மெகா மோசடி.. கும்பகோணத்தில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன் தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள்.சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துள்ளனர். பெரும்பாலும் அதில் வலம் வருவதால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றே அவர்களை கும்பகோணம் பகுதியில் அழைக்கின்றனர்.

விக்டரி என்ற பெயரில் சிட்பண்ட்,கிருஷ் பால்பண்ணை உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அவை இரட்டிப்பாக திருப்பி தரப்படும் என்ற அறிவிப்புடன் சிட்பண்ட் நடத்தி வந்தால் இவர்கள் நிறுவனத்தில் ஏராளமானவர்கள் பணம் செலுத்தியிருந்தனர். இந்நிலையில் துபாய் நாட்டில் விளம்பர நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதி தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்ஜெயிடம் எம்.ஆர். கணேஷ் -எம்.ஆர்.

சுவாமிநாதன் ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களிடம் ரூ.15 கோடி வரை மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை திருப்பி கேட்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதுடன் ஆட்சியில் உள்ளவர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும் கூறி மிரட்டுவதாக புகார் அளித்திருந்தார்.கும்பகோணம் நகர் முழுவதும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை ஏமாற்றி ரூ.600 கோடி மோசடி செய்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என்ற விபரம் குறிப்பிடாததால் அந்த போஸ்டரை ஒட்டி அவர்கள் யார் என்பது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பி.ஜே.பி கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.கணேஷிக்கு பி.ஜே.பியில் தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தக அணியின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி,அமித்ஷா ஆகியோரிடம் எங்களுக்கு நல்ல நட்பு இருப்பதாக கூறி அனைவரையும் கவர்ந்தனர்.

சமீபத்தில் அப்போதைய பி.ஜே.பி தமிழக தலைவரான முருகன் மற்றும் முக்கிய நிர்வாகியான கருப்பு முருகானந்தம் ஆகியோர் கணேஷ் வீட்டிற்கு சென்று சந்தித்தனர்.நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட சீட் கேட்டு காய்களை நகர்த்தினர் 

 

Tags :

Share via