தேர்வுத் தேதியை மாற்ற எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

by Staff / 06-12-2023 12:01:30pm
தேர்வுத் தேதியை மாற்ற எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சென்னையின் பல மையங்களில் இன்று UGC NET தேர்வுகள் நடைபெறும் என மத்திய உயர் கல்வித்துறை அறிவித்துள்ளதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது மத்திய அரசுக்கு தெரியாதா? ஒன்றிய அரசின் உயர் கல்வித்துறை யூஜிசி - நெட் தேர்வுகளை இன்று சென்னையில் பல மையங்களில் நடத்துகிறது. தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via