அரசு ஊழியர்களுக்கு- ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்
அரசு ஊழியர்களுக்கு- ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வு திட்டம் மத்திய அரசின் கடன் அனுமதி கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 11,000 ஆயிரம் கோடியை மத்திய அரசு அனுமதி அளித்த உடனே திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசின் நிதி அனுமதி கிடைக்கும் வரை ஜனவரி 1 முதல் 2026 அன்று அல்லது அதற்கு பிறகு ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவிருக்கும் ஊழியர்களுக்கு 30 சதவீதம் அல்லது 10,000 இதில் எது அதிகமோ அது இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு முந்தைய திமுக அரசு திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் தங்களின் கடைசி மாத அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை உறுதியான ஓய்வு விதமாக பெற இத்திட்டம் வழிவகை செய்துள்ளது..
Tags :



















