கலைஞர் கொண்டு வந்த நேரடி கொள்முதல் திட்டத்தை கைவிட்டது ஏன் ..?-பி.ஆர்.பாண்டியன்

by Editor / 16-03-2025 12:21:57am
கலைஞர் கொண்டு வந்த நேரடி கொள்முதல் திட்டத்தை கைவிட்டது ஏன் ..?-பி.ஆர்.பாண்டியன்

கலைஞர் கொண்டு வந்த நேரடி கொள்முதல் திட்டத்தை கைவிட்டது ஏன் - வேளாண்மை துறைக்கு என அறிவிக்கப்பட்ட நிதியை எங்கிருந்து பெறப் போகிறார் என்ற விபரம் இல்லாததால் இது வெறும் காகித பட்ஜெட் என்று தென்காசியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பரபரப்பு. பேட்டி..

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மாநில அளவிலான விவசாயிகள் மகா சபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.இதில் பங்கேற்பதற்காக தெற்காசிக்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியின் போது கூறியதாவது:-


தமிழ்நாடு அரசில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 5 வது ஆண்டாக வேளாண்மைத் துறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.ஏழு புதிய விதை சுத்திகரிப்பு ஆலைகள் 250 கோடி நிதியில் விதை உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். 1168 கோடி நிதியில் சொட்டு நீர் பாசனம்.

5 ஆயிரம் வேளாண் இயந்திரம் இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். வாடகை இயந்திரம் மையங்கள் கூட்டுறவு துறை மூலம் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அவை நிறைவேற்பட்படவில்லை.கலைஞர் கொண்டு வந்த நேரடி நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டு தனியாரிடம் ஒப்படைத்து விட்டனர்.2021-ல் முதல் கையெழுத்திட்டு நெல்லுக்கும் கருப்புக்கும் ஆதார விலை கிடைக்கும் என்றார்கள் இன்று வரை வழங்கப்படவில்லை.

உலகில் எங்கும் இல்லாத வகையில் நீர்நிலைகள் ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டு வந்ததை  திரும்பபெற கோரிக்கை வைத்தோம் அதை திரும்பப் பெறவில்லை.
இடைத்தரகர்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் மூலம் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.
இந்த பட்ஜெட் வெறும் காசித பட்ஜெட்டாக உள்ளது.

இந்த பட்ஜெட் தொகைக்கு நிதி எங்கிருந்து எடுக்கப் போகிறார்கள் என்ற விபரப் இல்லை.நிதியாதாரம் ஏது. ஆண்டுக்கு ஒரு முறை சம்பிராயத்திற்கு பட்ஜெட் போட்டு வருகிறார்கள்.5 ஆண்டில் ஒரு நீர்நிலைகளை உருவக்க நிதி ஒதுக்கவில்லை.ஒட்டு மொத்தமாக பட்ஜெட் பெயரில் விவசாயிகளை ஏமாற்றுகிறார்.இது நிதியில்லாத காசித வெற்று பட்ஜெட். இது குறித்து தமிழக முதல்வர் பதிலளிக்க வேண்டும்.

காஷ்மீர் முதல் குமரி வரையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வரக் கோரி நாளை செங்கோட்டையில் நடைபெறுகிறது. இதில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்கின்றனர்.நிதி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல்வர் மத்திய அரசிடம் நிதி கேட்டு முறையிட வேண்டும்.
கலைஞர் கொண்டு வந்த நேரடி கொள்முதல் திட்டத்தை ஏன் முதல்வர் கைவிடுகிறார் கூட்டனி கட்சிகளை கையில் வைத்துக் கொண்டு மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றுகிறார். இதை மக்கள் மன்றத்தில் நாங்கள் எதிர்ப்போம்.
50 ஆயிரம் கோடிக்கான நிதியை எப்படி பெற்று திட்டங்களை செயல்படுத்தப் போகிறார். பட்ஜெட் வெறும் அறிவிப்போடு நீண்று விடுமா? தெரியவில்லை.

விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ 5 ஆயிரம் கோடியை அபகரித்து வருகின்றனர். இந்த நிறுவனங்களிடம் இருந்து காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்காததை பார்க்கும் போது காப்பிட்டு  திட்ட குழுவுடன் அரசுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமுல் நிறுவனம் வருவதை அரசு தடுத்து வருகிறது. அவர்கள் வந்தாலாவது விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து விவசாயிகள் வாழ்பில் வளம் பெறுவார்கள்.
ஆனால் அதை தடுக்கும் அரசு தனியார் பால் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பை அரசே ஏற்படுத்தி வருகிறது.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் ஒய்வு பெற்றவர்களுக்கு பணி, அவுட்சோசில் பணி முறையை அரசு கையால்கிறது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போராட்டாமே விவசாயிகளின் வாழ்க்கையாக மாறி விட்டது.பரந்தூர் என்ற ஊர் இந்தியா வரைபடத்தில் இருக்கும் வரையில் அங்கு விமான நிலைய விரிவாக்கம் நடக்காது.தென்காசி மாவட்டத்தில் கனிமவளங்கள் கேரளவிற்கும் கர்நாடகத்திற்கும் கடத்தப்படுகிறது. கேரளாவிற்கு வரம்பு மீறி செல்கிறது. இதுதான் திராவிட மாடலா?

விவசாயம் குறித்து தமிழக முதல்வரோ வேளாண்மைத் துறை அமைச்சரோ நேரடியாக வாக்குவாதம் செய்யத் தயரா?தேர்தல் காலத்தில் இதற்கான பதிலை மக்களும் விவசாயிகளும் தருவார்கள்.இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்.

 

Tags : பி.ஆர்.பாண்டியன்

Share via