புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை  பெருமாள் திருக்கோவில்களில்  சிறப்பு பூஜைகள் - பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

by Editor / 21-09-2024 09:22:00am
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை  பெருமாள் திருக்கோவில்களில்  சிறப்பு பூஜைகள் - பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது அதிலும் புரட்டாசி சனி மிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாக பின்பற்றப்பட்டு வருகிறது பொதுவாக பெருமாளின்  பக்தர்கள்  மீது சனி பகவான் தன் முழு தாக்கத்தையும் காண்பிப்பது இல்லை புரட்டாசி சனிக்கிழமைகளில் சனியின் வீரியம் குறைந்து இருக்கும் என புராணங்கள் கூறுகிறது இதனால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் விழாக்கோலம் பூண்டு  காணப்படும் அந்த வகையில் இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிகிழமையை முன்னிட்டு  அதிகாலை முதலிலேயே பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் புளியோதரை தயிர் சாதம் தயிர் சாதம் பிற்பகல் ஒரு மணி வரை இந்த பிரசாதம் ஆனது வழங்கப்படும் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via