சாரல் மழையுடன் களைகட்டும் குற்றால சீசன்

by Editor / 28-07-2024 10:19:33am
சாரல் மழையுடன் களைகட்டும் குற்றால சீசன்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் காலம் என்பதால் குற்றால அருவிகளான மெயின் அருவி, புலி அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் வரத்தானது சீராக வந்து கொண்டிருக்கிறது.இன்று ஞாயிறு விடுமுறை ஒட்டி அனைத்து குற்றால அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி கரையில் காலை முதலே நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.சாரல் காற்றுடன் லேசான வெயில் குளிப்பதற்கு ரம்யமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கூச்சலிட்டு அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்து வரும் நிலையில் காவல்துறையினர் குறிப்பிட்ட நேரம் மட்டுமே சுற்றுலா பயணிகளை வரிசை முறையில் குளிக்க அனுமதித்து வருகின்றனர்.ஆண்கள் பகுதியை போலவே பெண்கள் குளிக்கும் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பெண் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஏராளமான வெளிய சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கும் நிலையில் அருவி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : சாரல் மழையுடன் களைகட்டும் குற்றால சீசன்

Share via