ஒரு ஒட்டு விவகாரத்தில் பாஜக பொய் அம்பலம்

by Editor / 13-10-2021 04:23:44pm
ஒரு ஒட்டு விவகாரத்தில் பாஜக பொய் அம்பலம்



கோவையில் பெரியநாயக்கம்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த குருடம்பாளையம் ஊராட்சியில் ஒன்பதாவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் கார்த்திக் என்பவர் போட்டியிட்டிருந்தார்.

கார்த்திக்கிற்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது.இதற்கிடையில், கார்த்திக் என்பவர் பாஜக சார்பில் போட்டியிடவில்லை என்றும் கார் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டவர் என்றும்  பாஜக ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஊராட்சி வார்டுக்கு அரசியல் கட்சி சார்பில் உறுப்பினர்கள் போட்டி போட முடியாது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊராட்சியில் வெவ்வேறு சின்னங்களில்தான் போட்டியிட முடியும்.

இந்த உண்மை கூட தெரியாமல் பாஜகவினர் சமூக தளங்களில் கார் சின்னம் என்று கூறி வருகின்றனர். இதை அம்பலப்படுத்தும் வகையில் கார்த்தி போட்டியிட்ட கார் சின்னத்துக்கு பாஜக ஒட்டிய சுவரொட்டிகளையும் சிலர் வெளியிட்டிருக்கிறார்கள். அதில், பாஜக வேட்பாளர் கார்த்திக்கு கார் சின்னத்தில் வாக்களிப்பீர் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டு மோடி, அண்ணாமலை படங்களும் இடம்பெற்றுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo