சுயேட்சைகளுக்கு கடும் கிராக்கி

by Editor / 02-03-2022 02:12:12pm
சுயேட்சைகளுக்கு கடும் கிராக்கி


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியில் சுயேட்சைகள் ஆதிக்கத்தால் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் தி.மு.க  2 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால்  தற்போது இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.

இங்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியும், தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.  இதில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.  இதுதவிர சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.

பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க  மெஜாரிட்டிக்கு 8 கவுன்சிலர்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது திமுக வில் 2 பிரிவாக உள்ளதால் அ.தி.மு.க., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள்  வெற்றி பெற்றவுடன் அலேக்காக அழைத்து சென்றனர். அதில் இரண்டு தரப்பினரும் சுயேட்சை மற்றும்பிறக்கட்சி வேட்பாளர்களை
மறைமுக தேர்தல் நடைபெறும் வரை குற்றாலம், சென்னை, கேரளா மாநிலத்தில் போன்ற இடங்களில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மெஜாரிட்டிக்காக அழைத்து செல்லப்பட்டுள்ள   சுயேட்சை கவுன்சிலர்களுக்கு ரூ.15 முதல் ரூ.25 லட்சம் வரை குதிரை பேரம் நடந்துள்ளதாக ஆலங்குளம் பகுதியில் பேசப்படுகிறது.  இன்று பதவியேற்றவுடன் கவுன்சிலர்களை மெஜாரிட்டிக்காக சினிமா பாணியில் கடத்தி சென்றது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆ இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

Tags : Strong demand for independents

Share via