கடையநல்லூர் அருகே அரசு பஸ் தாசில்தார் ஜீப் மோதியதில் தாசில்தார் டிரைவர் படுகாயம் .
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புன்னையாபுரம் பகுதியில் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையத்திலிருந்து தென்காசி நோக்கி விரைந்து வந்த அரசு பஸ் புன்னையாபுரம் பெட்ரோல் பல்க் அருகே வந்த பொழுது கடையநல்லூரில் இருந்து புளியங்குடியை நோக்கி விரைந்து சென்ற கடையநல்லூர் தாசில்தார் ஜீப் தடுப்பு வேலியை தாண்டி சாலையின் குறுக்கே பாயந்தநிலையில் அரசு பேருந்தும் எதிர்பாராத விதமாக ஜீப் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது இது இதில் ஜுப்பை ஒட்டி வந்த டிரைவர் மாரிமுத்துப்பாண்டி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து வந்து ஜீப் டிரைவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜீப் ஓட்டுநர் மீதுதான் தவறு என்று கூறப்படுகிறது.
Tags : கடையநல்லூர் அருகே அரசு பஸ் தாசில்தார் ஜீப் மோதியதில் தாசில்தார் டிரைவர் படுகாயம் .