ஆண் குழந்தையை விற்று பணம் சம்பாதித்த தாய்

பெங்களூரு பகுதியை சேர்ந்த பாலாமணி - மம்தா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் ஆண் குழந்தையை மட்டும் மம்தா பணத்திற்கு ஆசைப்பட்டு, ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்களிடம் விற்றதாக பாலாமணிக்கு தகவல் கிடைத்துள்ளது.அதனைத்தொடர்ந்து அவர் கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி காவல் நிலையத்தில், தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போலீசாருக்கு புகாரளித்தார். புகாரின் பேரில் அத்திப்பள்ளி போலீசார் ஈரோடு சென்று பாலாமணி - மம்தா தம்பதியர்களின் ஆண் குழந்தையை வளர்த்து வருபவர்களிடமிருந்து குழந்தையை மீட்டனர். விற்கப்பட்ட போது குழந்தைக்கு ஒன்றரை வயது இருந்த நிலையில், தற்போது அந்த சிறுவனுக்கு 6 வயதாகி உள்ளது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் சிறுவனை வளர்த்தவர்கள், அவர் பெற்றோரிடம் அவரை ஒப்படைத்தனர்.
Tags :