மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை
துருக்கியை சேர்ந்தவர் அட்னான் அக்தார் (66) மதபோதகரான இவர், ஏ9 என்ற தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற்றார். அக்தார் பழமைவாத கொள்கைகளை ஆதரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது. இந்நிலையில், அவருக்கு கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்றம் மேலும் 10 குற்றவாளிகளுக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
Tags :