பனிமூட்டத்திற்கு நடுவிலும் குமரியில் சூரியன் உதயமான காட்சி.
உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் தினமும் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை காண ஏராளமானோர் வருகை புரிவர். அதிலும் வார விடுமுறை தினங்களில் வழக்கமான சுற்றுலா பயணிகளை விட உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.
அந்த வகையில் இன்று வாரவிடுமுறை என்பதால் தென் இந்தியாவின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், உள்ளூர் பகுதிகளை சேர்ந்தவர்களும் ஏராளமான அளவில் காலையிலேயே கடற்கரையில் கூடத்தொடங்கினர். பனிமூட்டம் காரணமாக கடலில் இருந்து உதித்து வரும் சூரியனை காண முடியாத நிலை இருந்தாலும், அவர்கள் “சன் வியூ பாய்ண்ட்” பகுதியில் ஒரே இடத்தில் கூடி நின்று கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்த்து ரசித்த வண்ணம் சூரியன் கடலில் இருந்து தோன்றி மேலே வரும் காட்சியையும் கண்டு ரசித்தனர்.
மேலும் இந்த நிகழ்வுகளை எல்லாம் தங்களது செல்போண்களில் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டதால் காந்தி நினைவு மண்டபம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுற்றுலா படகு குழாம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Tags :