மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழப்புஇறந்தவர் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய்- அமைச்சர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று கழுதூரில் மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடலுக்கு தொழிலாளர் நலன் மற்றும் தேன் மேம்பாட்டு துறை அமைச்சரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் கணேசன் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி பி ஆதித்ய செந்தில் குமார் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், விருத்தாசலம் சார் ஆட்சியர் திட்டக்குடி வட்டாட்சியர் ஆகியோர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர் இறந்தவர்கள் அனைவரும் அமைச்சர் கணேசனின் சொந்த ஊரை சேர்ந்தவர்கள். அரசு சார்பில் இறந்தவர் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் சார்பில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Tags : மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழப்புஇறந்தவர் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய்- அமைச்சர்.



















