12ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.-தந்தை புகார்.

by Editor / 07-01-2025 03:04:38pm
12ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.-தந்தை புகார்.

நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்த 12ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.நேற்று தனியார் பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவன்,தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.நேற்று மாலை குடும்பத்தினரிடம் செல்போனில் பேசிய பின், மாடியில் இருந்து குதித்ததாக தகவல்.சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை.மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் தள்ளி விட்டார்களா? என போலீசார் விசாரணை.மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக நாமக்கல் காவல் நிலையத்தில் தந்தை புகார்.
 

 

Tags : 12ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.-தந்தை புகார்.

Share via