ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமல்-தலைவர்கள் சிலைகள் மூடல்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் சீல் வைக்கப்பட்டன. மேலும், அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் துணி மூடப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.05ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
Tags : ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமல்-தலைவர்கள் சிலைகள் மூடல்.