உருவ பொம்மையை எரித்த 20 பேர் கைது

by Staff / 25-02-2023 12:40:05pm
உருவ பொம்மையை எரித்த 20 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான், பட்டியலினத்தவரை குறித்து அவதூறாக பேசியதாக புகார் இருந்தது. இதனால் சீமானுக்கு பட்டியலின சமூக அமைப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே திரண்ட தமிழ் புலி கட்சியினர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திடீரென அவர்கள் சீமான் உருவ பொம்மை எரித்த கண்டனம் முழக்கமிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியை ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை எடுத்து உருவபமே எரித்த அக்கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories