விஜய்க்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டி.

by Staff / 14-09-2025 06:50:30pm
 விஜய்க்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டி.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று சனிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக தலைவர் விஜய். கட்சித் தொண்டர்களின் கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக, விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து ஊர்ந்து சென்றதால், திட்டமிட்ட நேரத்தில் அவரால் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.இந்தநிலையில் பெரம்பலூரில் விஜய் தனது பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்த நிலையில்,அவரைக் காண காத்திருந்து அதிருப்தியடைந்த தவெக தொண்டர்கள் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
 

 

Tags :  விஜய்க்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டி

Share via