பெண் பலி தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

by Staff / 14-09-2025 07:39:45pm
பெண் பலி தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டிணம் பகுதியில்  கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற சுப்பம்மாள் (67) என்ற பெண் சிகிச்சைநடந்தபோதே திடீரென உயிரிழந்தார். உடனடியாக அவரது உடலைக்கைப்பற்றிய பாவூர்சத்திரம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குவபதிவு செய்து நெல்லை பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்தனர்.இந்தநிலையில் தவறான சிகிச்சையால் மரணம் ஏற்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்தனர். அனுமதி பெறாமலே மருத்துவமனை,மற்றும் மருந்தகம் நடத்திவரப்பட்டதை கண்டறிந்த இதுகுறித்து விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், முறையான அனுமதி இன்றி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். ரஷியாவில் மருத்துவம் பயின்று பயிற்சி பெற்ற மருத்துவர் சரவணகுமார் (27) சிகிச்சை அளித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

Tags : பெண் பலி தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

Share via