அண்ணாமலை இல்லாமல் தொடங்கிய ஆலோசனை

by Staff / 05-10-2023 12:07:01pm
அண்ணாமலை இல்லாமல் தொடங்கிய ஆலோசனை

பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமலேயே ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் தொடக்கம் நடைபெற்று வருகிறது. அதிமுக உடனான கூட்டணி முறிந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை அண்ணாமலை வராத நிலையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்று அதிமுக கூட்டணி முறிவு குறித்து விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories