தென்காசி மாவட்டத்தில்  நான்கு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்-மாவட்ட நிர்வாகம்.

by Editor / 30-08-2023 08:49:58pm
தென்காசி மாவட்டத்தில்  நான்கு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்-மாவட்ட நிர்வாகம்.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள் விழாவானது வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழலில், தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், பிறந்தநாள் நிகழ்வை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நெற்கட்டும்செவல் பகுதிக்கு வருகை தந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்த தீவிரமாகி வருகின்றனர்.

இந்த நிலையில், ப பூலித்தேவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வருகின்ற செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 மேலும், 144 தடை உத்தரவு தென்காசி மாவட்டம் முழுவதும் அமலில் இருக்கும் வேளையில் 4 நபர்களுக்கு மேல் கூட்டம் கூட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள் விழா

Share via

More stories