பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய குழந்தைகள்

by Staff / 30-08-2023 05:36:45pm
பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய குழந்தைகள்

அன்பின் அடையாளமாக கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகளுடனான நிகழ்ச்சியில் பங்கேற்றார். டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுடன் ரக்ஷாபந்தனை கொண்டாடினார். இன்று காலை பிரதமர் இல்லத்திற்கு சென்ற குழந்தைகள் அவருக்கு ராக்கி கயிறு கட்டினர். இந்த நிலையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். முன்னதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட போது, அதில் ஒரு குழந்தை மோடிக்கு கன்னத்தில் முத்தமிட்டது.

 

Tags :

Share via
Logo