நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றவர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழப்பு

சென்னையில் கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை அருகே நாய் கடித்ததில் முகமது நஸ்ருதீன் (50) என்பவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.நாய்கடியால் காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 12 ஆம் தேதி மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags : நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றவர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழப்பு