2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, "வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக கடந்த என்.ஆர் காங்கிரஸ் ஆண்டு விழாவில் அறிவித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். நான் தமிழகத்திற்குச் செல்லும் போதெல்லாம், அங்குள்ள மக்களும் நண்பர்களும் என்.ஆர் காங்கிரஸை தமிழகத்திலும் விரிவுபடுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.அதனால் தமிழகத்திலும் கட்சியை விரிவுபடுத்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் முதல் படியாக இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
Tags : 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.