ரூ.4 லட்சம் பட்ஜெட்டில் வாங்கக் கூடிய 3 பட்ஜெட் கார்கள்

by Editor / 15-09-2021 03:14:07pm
ரூ.4 லட்சம் பட்ஜெட்டில் வாங்கக் கூடிய 3 பட்ஜெட் கார்கள்

பலருக்கு கார் வாங்குவது பல நாள் கனவாக இருக்கும். பலருக்கு கார் வாங்குவது ஒரு ஆடம்பரச் செலவாக இருக்கும். இன்று ஒரு இரண்டு சர்க்கர வாகனத்தையே 1 லட்சம் ரூபாய், 2 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கும் போது 4 லட்சம் ரூபாய்க்குள் 3 கார்கள் சிறிய குடும்பங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

பட்ஜெட் கார்கள் என்றால் பலருக்கு நினைவுக்கு ஒரு பிராண்டு மாருதி சுசுகி. அதிலும் குறைந்த விலை கார் என்றால் மாருதி சுசுகி ஆல்டோ. ரூ.3.15 லட்சம் ரூபாய் + பதிவுக்கட்டணம் + சாலை வரி + இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றைச் செலுத்தி இந்த காரை 4 லட்சம் ரூபாய்க்குள் வாங்கிவிடலாம்.

796 சிசி பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இஞ்சினுடன் மாருதி சுசுகி ஆல்டோ விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல் கார் லிட்டர் ஒன்றுக்கு 22.05 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும். இதுவே சிஎன்ஜி எஞ்சின் என்றால் ஒரு கிலோ சிஎன்ஜி கேஸ்க்கு 31.56 கிலோ மோட்டர் மைலேஜ் வரும்.மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ கரும் 4 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கிறது. ஆனால் அது ஆப் ரோடு விலை. ஆன் ரோடு விலை பதிவுக்கட்டணம் + சாலை வரி + இன்சூரன்ஸ் என 4,39 லட்சம் ரூபாய்க்கு இந்த காரை வாங்க முடியும்.

இந்த காரும் பெட்ரோல், சிஎன்ஜி வகைகளாக விற்பனைக்கு வருகிறது. 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. 1000 சிசி திறன் கொண்டது.

 

Tags :

Share via