கர்நாடகா அரசை கண்டித்து டெல்டா மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்

by Editor / 11-10-2023 08:25:07am
கர்நாடகா அரசை கண்டித்து டெல்டா மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்

டெல்டா மாவட்டத்தில் விவசாயப்பணிகள் தொடங்கிவிட்டநிலையில் போதிய நீரின்றி பயிர்கள் வாடி வருகின்றன.இதனைத்தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து வடமாவட்டங்களில் இன்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மயிலாடுதுறைமாவட்டத்தில் கர்நாடகா அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் தொடங்கியது.மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி செம்பனார்கோவில், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம்  நடைபெறுகிறது.


வேதாரண்யம் தாலுகாவில் 5000 கடையில் அடைப்பு.

காவிரி நீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், காவிரி நீரை  பெற்று தராத மத்திய  அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டம்.வேதாரண்யம், தலைஞாயிறு ஆயக்காரன்புலம், வாய்மேடு,      கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.


சீர்காழியில் 5000 கடைகள் அடைத்து வணிகர்கள் காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிர்ப்பு.


காவிரி நீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும் காவிரி நீரை  பெற்று தராத மத்திய  அரசை கண்டித்து வணிகர்கள் சார்பாக மாபெரும் கடையடைப்பு போராட்டம். சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு.பால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பு.


மன்னார்குடிபகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.

உச்சநீதி மன்ற இறுதி தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி... திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி , கோட்டூர் , நீடாமங்கலம் , கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் பால், மருந்தகங்கள் தவிர 20,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு 

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல்,கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.


திருவாரூர் மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு 5000க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதேபோன்று லாரி உரிமையாளர்கள் மாவட்ட முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 

கர்நாடகா அரசை கண்டித்து டெல்டா மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்
 

Tags : கர்நாடகா அரசை கண்டித்து டெல்டா மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்

Share via