நாடுமுழுவதும் காதலர் தினம் உற்சாகம்.-போலீசார் பாதுகாப்பு.
சுற்றுலா தலமான கன்னியாகுமரி காந்தி மண்டபம் மற்றும் கடற்கரைபகுதிகளில் காதலர்கள் ஜோடி ஜோடியாக சுற்றிக்கொண்டும், ஓரிடத்தில் அமர்ந்து கொண்டும் தாங்கள் கொண்டுவந்த பரிசுப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரையில் காதலர்கள் எல்லை மீறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி ராஜாஜி பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காதலுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு தரப்பினர் இனிப்புகளை கொடுக்க உள்ளதாலும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் முழக்கம் எழுப்ப உள்ளதாலும் மதுரை ராஜாஜி பூங்கா முன் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூங்கா மற்றும் பிரையண்ட் பூங்காவில் காதலர்களின் நினைவு சின்னங்களான இதயம் மற்றும் தாஜ்மாஹால் போன்று பூக்களால் வடிவமைப்பு,பூங்காவிற்கு வரும் காதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்து சென்றவண்ணம் உள்ளனர்.
Tags :