தேவர் குருபூஜை 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக் .
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி மற்றும் 59 குருபூஜை விழா வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
இதையடுத்து தமிழ முதல்வர்,அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்
இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தயார் படுத்துவதற்காக கூடுதல் காவல் துறை இயக்குனர் தாமரைக்கண்ணன் தலைமையில் நான்கு காவல்துறை துணைத்தலைவர், 19 காவல் கண்காணிப்பாளர், 28 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 65 துணை காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்ததாவது:

மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், தற்போது கொரோனா காலம் என்பதனால் பொதுமக்கள் அதிகளவில் வரவேண்டாம் என்றும் தங்களுடைய கிராமங்களில் சிறப்பாக கொண்டாடும் படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அறிவுறுத்தி உள்ளார்.
Tags :