இபிஎஸ்-க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு

by Staff / 03-04-2023 12:44:51pm
இபிஎஸ்-க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் மனு அளித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை, பொதுச் செயலாளர் பதவியை அங்கீகரிக்கக் கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

Tags :

Share via