வங்காளதேச மாணவர் தலைவர் ஒஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது

by Admin / 19-12-2025 11:46:47pm
வங்காளதேச மாணவர் தலைவர் ஒஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது

இந்தியா -வங்காளதேசம் இடையேயான உறவு சேக் ஹசீனாபதவி விலகியதைதொடர்ந்து பெரும் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வங்காளதேச மாணவர் தலைவர் ஒஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்துள்ளது ..கேடியை கொன்ற கொலையாளிகள் இந்தியாவிற்கு தப்பி சென்றதாக கூறி வங்கதேசத்தில் இந்திய தூதரகங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு சூழல் மோசம் அடைந்து வருவதால் இந்தியா தனது விசா மையங்களை தற்காலிகமாக மூடி உள்ளது. 17ஆம் தேதி வங்காளதேச உயிர் ஆணையரை இந்திய வெளிவரவு அமைச்சகம் அழைத்து தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது .குறிப்பாக, இந்து தொழிலாளி . தீபுசந்திரதாஸ் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025 ஆம் ஆண்டில் எல்லையில் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளன. எல்லையோரங்களில் வேலி அமைப்பது தொடர்பாக இரு நாட்டு பாதுகாப்பு படைகள் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஹேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தது வங்காளதேச இடைக்கால அரசாங்கத்துடன் ஒர் உராய்வை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வங்கதேசம் சீனாவுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கம் காட்டுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலாக மாறி உள்ளது.

வங்காளதேச மாணவர் தலைவர் ஒஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது
 

Tags :

Share via