மதுரைக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

by Editor / 05-04-2025 11:54:21pm
மதுரைக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

 06.04.2025 தேதி  பாரத பிரதமர் நரேந்திரமோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு 06.ஆம் தேதி காலை முதல்  போக்குவரத்து மாறுதல்கள் செய்யப்படுகின்றன என காவல்துறை அறிவிப்புவெளியிட்டுள்ளது.

1) வாகன நிறுத்தம் தடைசெய்யபட்டுள்ள சாலைகள்/இடங்கள்

1. மதுரை விமான நிலையம் முழுவதும் (அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர)

2. மதுரை விமான நிலையம் முதல் மண்டேலா நகர் சந்திப்பு வரை

3. பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு ஹர்ஷிதா மருத்துவமனை சந்திப்பு வரை

4. மண்டேலா நகர் சந்திப்பிலிருந்து விரகனூர் ரவுண்டானா சந்திப்பு வரை

1) மேலூர் மார்க்கமாக விரகனூர் சுற்றுச்சாலை வழியாக கப்பலூர் பாலம் சென்று திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் கொட்டாம்பட்டி, நத்தம், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், தனிச்சியம் பிரிவு. திண்டுக்கல் நான்குவழிச்சாலை வழியாக துவரிமான் சந்திப்பு, நாகமலை புதுக்கோட்டை 4 வழிச்சாலை வழியாக கப்பலூர் பாலம் சென்று திருமங்கலம் பைபாஸ் சாலை வழியாக செல்லலாம்.

மேலூர் மார்க்கமாக விரகனூர் சுற்றுச்சாலை மற்றும் மண்டேலா நகர் வழியாக அருப்புக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் கொட்டாம்பட்டி, நத்தம், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், தனிச்சியம் பிரிவு, திண்டுக்கல் 4 வழிச்சாலை வழியாக துவரிமான் சந்திப்பு, நாகமலை புதுக்கோட்டை 4 வழிச்சாலை வழியாக கப்பலூர் பாலம், கள்ளிக்குடி சென்று இடது புறம் திரும்பி அருப்புக்கோட்டை செல்லலாம்.

மேலூரிலிருந்து  விரகனூர் மற்றும் கப்பலூர் பாலம் சென்று திருநெல்வெலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் கார்கள் அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், தனிச்சியம் பிரிவு, திண்டுக்கல் 4 வழிச்சாலை வழியாக நாகமலை புதுக்கோட்டை 4-வழிச்சாலை கப்பலூர் பாலம் சென்று திருமங்கலம் பைபாஸ் சாலை வழியாக அல்லது திருமங்கலம் நகருக்குள் சென்று செல்லலாம்.

மேலூரிலிருந்து நான்கு வழிச்சாலை வழியாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒத்தகடை, திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம் வழியாக செல்லலாம்.

 சிவகங்கை ரோட்டிலிருந்து மதுரை வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பூவந்தி, திருவாதவூர், இடையபட்டி, சித்தாக்கூர், திருமோகூர், ஒத்தக்கடை வழியாக செல்லலாம்.

இராமநாதபுரம் சாலையிலிருந்து வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் திருப்புவனம், நரிக்குடி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்லலாம்.

அருப்புக்கோட்டை ரோட்டிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பாரபத்தி, கூடக்கோவில், அச்சங்களம், மைக்குடி, மேலக்கோட்டை, திருமங்கலம் மற்றும் நான்கு வழிச்சாலை வழியாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 மதுரை நகர் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை வழியாக திருமங்கலம் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மதுரை நகருக்குள் திருப்பரங்குன்றம் சாலை வழியாக திருமங்கலம் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

06.04.2025-ம் தேதி காலையில் மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய அனைத்து பயணிகள் மற்றும் அவர்களுக்கான வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது

மதுரை விமான நிலையத்திற்கு வாகனத்தில் வரக்கூடிய பயணிகள் வாகன வழித்தட எண் 2-ல் மட்டுமே பயணிகளை இறக்கிவிடவோ அல்லது ஏற்றிக்கொண்டு செல்லவோ அனுமதிக்கப்படுவர். மேலும் பயணிகளை ஏற்றிச்செல்லவோ மற்றும் இற்க்கிவிடவோ வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் பயணிகளின் பயண சீட்டின் Soft copy-யை தனது மொபைல் போனில் வைத்திருக்க வேண்டும்.

முக்கியஸ்தர் செல்லும் வழித்தடங்களான விரகனூர் சுற்றுச்சாலை, விமான நிலைய சாலை மற்றும் மண்டேலநகர் சந்திப்பிலிருந்து மதுரை விமான நிலையம் வரையுள்ள சாலைகளில் கட்டிட சம்மந்தமான (மணல், ஜல்லி, கம்பி மற்றும் மரசாமான்கள்) பொருட்களை சாலையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

மேற்படி தற்காலிக போக்குவரத்து வியாபாரிகளும் மாற்றங்களுக்கு பொதுமக்களும், மற்றும் விமானநிலையத்திற்கு செல்லும் பயணிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரைமாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 

Tags : மதுரைக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

Share via

More stories

Logo