ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் 9 பேருக்கு ஆயுள் தண்டனை.

பசுபதிபாண்டியன் ஆதரவாளர் அலங்காரத்தட்டு வின்சென்ட் என்பவரை 1999 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்று துன்புறுத்தினர். இதில் வின்சென்ட் உயிரிழந்தார்.இந்த வழக்கு 1999 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. அலங்காரத்தட்டு வின்சென்ட் லாக்கப் டெத் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் 9 பேருக்கும் தூத்துக்குடி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.காவல்துறை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உட்பட ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார் நீதியரசர் தாண்டவன் 26 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வின்சென்ட் மனைவி இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.தற்போது ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் டிஎஸ்பி ஆக பணிபுரிகிறார்.
டி.எஸ்.பி. உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது தென்மாவட்டத்திலேயே இதுதான் முதன் முறை என்று கூறப்படுகிறது. வழக்கில் தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இதில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனைவி, மகள்கள், பேரன்கள், பேத்திகள் என பலரும் தண்டனை அறவிப்பை கேட்டதும் கதறி அழுதனர்.
Tags : ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் 9 பேருக்கு ஆயுள் தண்டனை.