கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 19-07-2022 11:19:43pm
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீராக சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக சிதம்பரம் தாலுகாவில் உள்ள சில கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்துறை  மற்றும் காவல் துறையினருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரம் மற்றும் அதனை சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

Tags : Increase in water flow in Kollidam river. Flood warning for coastal villages

Share via