அயர்ன் மேன் துப்பிய சூயிங்கம் 45 லட்சத்திற்கு ஏலம்

அயர்ன் மேனாக நடித்து பிரபலமான ராபர்ட் டவுனி ஜூனியர் மென்று துப்பிய சூயிங்கம் 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜான் ஃபேவ்ரூவின் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் ஸ்டார் விழாவில் அயர்ன் மேன் ராபர்ட் டவுனி ஜூனியர் தான் மெல்லும் சூயிங்கத்தை ஃபவ்ரூவின் நட்சத்திரத்தின் மீது ஒட்டினார். இதனையடுத்து, இந்த சூயிங்கத்தை ஈபே பயனர் 45 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், சூயிங்கத்திற்கு இவ்வளவு பணம் செலவழிக்கும் அளவுக்கு மக்கள் முட்டாளாக உள்ளனர் என கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags :