வெளியானது அயோத்தி ராமரின் புகைப்படம்

by Staff / 19-01-2024 02:18:04pm
வெளியானது அயோத்தி ராமரின் புகைப்படம்

அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்பட்ட உள்ள ராமர் சிலை தொடர்பான புகைப்படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளன. உத்தர பிரதேசம், அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கண்களை மட்டும் துணியால் கட்டியபடி சிலை கர்ப்ப கிரகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தினத்தன்று கண்கள் திறக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் என அயோத்தி அரக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories