நாடாளுமன்ற தேர்தல்.. திமுக பிரதிநிதிகள் நியமனம்

by Staff / 19-01-2024 02:10:21pm
நாடாளுமன்ற தேர்தல்.. திமுக பிரதிநிதிகள் நியமனம்

வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள, திமுகவின் மேற்கு மண்டல பிரதிநிதியாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களமிறக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கே.என்.நேரு தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ள திமுக ஒருங்கிணைப்பு குழுவில் மண்டலத்துக்கு ஒருவர் என அமைச்சர்கள் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர். இந்நிலையில் வடக்கு மண்டலத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, தெற்கு மண்டலத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கின்றனர். மேலும் டெல்டா மண்டலத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மண்டலத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி என குழு செயல்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories