கொரோனா பாதித்த பெண் காவலர்... பிரசவமான அடுத்த நாளே இறந்த பரிதாபம்...
குழந்தை பிறந்து ஒரே நாளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் வசந்தா 47. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
வசந்தா கர்ப்பமாக இருந்ததால் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் வசந்தாவிற்கு கொரோனா தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவுகள் வந்தது.
இதனையடுத்து கடந்த 28 ஆம் தேதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா வார்டில் வசந்தா சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த வசந்தாவிற்கு நேற்று திடீரென வலி ஏற்பட்டு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் இன்று காலை 4.15 மணியளவில் வசந்தா கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை பிறந்த ஒரே நாளில் பெண் காவலர் கொரோனா தொற்றினால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
Tags :